×

டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: விமானசேவை பாதிப்பால் மக்கள் அவதி

டெல்லி: டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானசேவை பாதிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகாலை 3 மணி முதல் சாரல் மழை பெய்து வருவதால் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்படி, 60 முதல் 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சூறைக்காற்றுடன் சாரல் மழை இன்று அதிகாலை முதல் பெய்ய தொடங்கியது. கனமழையால் டெல்லியில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்படைந்ததுடன், சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி விமான நிலையத்தில் புறப்பட வேண்டிய 40-க்கும் மேற்பட்ட விமானங்கள், காலதாமதமாக புறப்படும் என விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், டெல்லி விமான நிலையத்திற்கு தரையிறங்க வேண்டிய 18 விமானங்களின் வருகை தாமதமாகி உள்ளதாகவும், 2 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோசமான வானிலை காரணமாக டெல்லி விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி விமானநிலையத்தில் இருந்து காலதாமதமாக புறப்படும் விமானங்களின் விமான நேரங்கள் குறித்து அந்நிறுவன இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவித்தனர். டெல்லியை தவிர, உத்திரப்பிரதேசம் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழையானது தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. …

The post டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை: விமானசேவை பாதிப்பால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Capital Delhi ,Dinakaran ,
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...